Tuesday, April 21, 2009

கிரகங்களின் சக்திதான் மனித வாழ்வை நிர்ணயிக்கிறதா?

கிரகங்களின் சக்திதான் மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன என்கிறது சோதிடம்! அதை மறுக்கிறார்கள் கீழ்க்கண்ட விஞ்ஞானிகள்:

1. தில்லி பல்கலைக்கழக விஞ்ஞானி

2. தமிழ்நாடு வானவியல் விஞ்ஞானி தேவதாஸ்

3. சன்தொலைக்காட்சியில் உரையாடிய விஞ்ஞானி

பூமி தன்னைத்தானே 18.5 கி.மீ வேகத்தில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது.

சூரியனிலிருந்து பூமி 15 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. பூமி வினாடிக்கு 29 கி.மீ வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரிய ஒளி பூமிக்கு வந்து சேர 7ஙூ நிமிடம் ஆகிறது. பூமி ஒரு உயிர்க்கிரகம்! இங்கு தான் உயிரினங்களும் தாவரங்களும், மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உயிர்க் காற்று (பிராண வாயு), நீர், மிதமான வெப்பம் இருக்கின்றன.

கடுங்குளிராலும், அதிக வெப்பத்தாலும் மற்ற கிரகங்கள் வறண்டு கிடக்கின்றன. இந்த வறண்டு போன கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்தி உண்டு என்றும் அந்த சக்திதான் பூமியிலுள்ள மனிதர்களின் வாழ்வை நிர்ணயிக்கிறதென்றும் கூறும் சோதிடர்கள்,உயிர்த்துடிப்பான பூமி கிரகத்திற்கு என்ன சக்தி உள்ளது என்று சொன்னதுண்டா?

வியாழன், சனி இரண்டு கிரகங்களும் பூமியை விடப் பெரிய கிரங்கள்! மற்ற புதன், வெள்ளி, செவ்வாய்க் கிரகங்கள் பூமியை விடச் சிறிய கிரகங்களே! பூமிக்குப் பக்கத் திலே 4 கோடி கி.மீ. தூரத்திலுள்ள சிறிய கிரகம் வெள்ளிக்கிரகத்திற்கோ 9 கோடி கி.மீ. தூரத்திலேயுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கோ பூமியால் எந்தக் காலத்திலாவது பாதிப்பு ஏற்பட்டதென்று கூற முடியுமா?

பூமியால், பக்கத்திலுள்ள கிரகங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதபோது அந்தக் கிரகங்களால் பூமிக்கும், பூமியில் உள்ள மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? உலக விஞ்ஞானிகள் மற்ற கிரகங்களுக்கு அத்தகைய சக்தியில்லை என்கிறார்கள். சோதிடர்கள் கிரகங்களுக்கு சக்தி உண்டு என்று பொய் கூறுகிறார்கள்! ஏமாளிகள் இங்குதானே இருக்கிறார்கள்.

கிரகங்களுக்கு சக்தி உண்டா?

17.4.2005இல் தில்லி பல்கலைக்கழக விஞ்ஞானி அளித்த பேட்டியில், ஈர்ப்புவிசை தவிர கிரகங்களுக்கு வேறு எந்த சக்தியும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

17.09.2005இல் சன் தொலைக்காட்சியில் பேசிய தமிழ்நாடு வானவியல் அறிவியல் கழக விஞ்ஞானி தேவதாஸ் கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை தவிர வேறு எதுவும் கிடையாது என்று விளக்கமளித்தார்.

7.08.2005-இல் சன் தொலைக்காட்சியில் மாலனுடன் உரையாடிய விஞ்ஞானி அறியாமையால்தான் கிரகங்களால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமென்று நம்புகின்றனர். கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை என்று விளக்கினார்.

இதே கருத்துதான் அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்தும் ஆகுமென்று தில்லி பல்கலைக்கழக விஞ்ஞானி கூறியிருக்கிறார். உலக விஞ்ஞானிகளின் கருத்தும் அதுவே தான்!

விஞ்ஞானிகளின் கருத்தையும், ஆய்வு களையும் ஏற்றுக் கொள்ளாமல், எந்த அறிவியல்அறிவும் இல்லாத சோதிடர்கள் கூறுவதைக் கேட்டு கிரகங்களுக்கு ஏதோ சக்திஇருப்பதாக நம்புவது விஞ்ஞான உல கத்திலிருந்து விலகிச்செல்வதாக ஆகாதா?

உண்மை இருக்குமானால் நம்புங்கள். சொல்லுகின்றவரைப் பொறுத்துதான் எதையும் நம்ப வேண்டும்! தமிழர்கள் முன்னேறிவிடக்கூடாது, கல்வி கற்று உயர்ந்திடக் கூடாது என்ற மனப்பான்மை யுடன் வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் கூறுவதை நம்பலாமா? தமிழர்கள் தற்குறி களாகவே இருந்திட வேண்டும் என்பதற் காகவே பார்ப்பனர்களால் அறிவுக்குப் பொருந்தாத சோதிடம் திணிக்கப்பட்டிருக் கிறது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சில கருவிகளை விண்வெளி ஆய்வுக்கூடத்தில் இணைப்பதற்கு பூமியிலிருந்து 350 கிலோ மீட்டர்உயரத்தில் வானவெளியில் மிதந்தபடி இணைப்புப் பணியை மேற்கொண்டதை தொலைக் காட்சியில் அனைவரும் பார்த்திருக்கக் கூடும்! பூமியின் ஈர்ப்பு விசை 350 கி.மீ. உயரத்தில் வலுவிழந்து இருப்பதால் மனிதர் கள் கீழே பூமியில் விழுந்து விடாமல் வான வெளியில் மிதக்கிறார்கள்.

பூமியைப் போலவே மற்ற கிரகங் களுக்கும் ஈர்ப்பு விசை மட்டுமே உண்டு! அதுவும் சில குறிப்பிட்ட தூரத்திற்கே! பூமியை எட்டுகிற அளவிற்கோ அல்லது பூமியை தாக்குகிற அளவிற்கோ எந்த சக்தியும் இல்லை என்பதை இதன் மூலம் அறிய முடியும்!

அறிவியலா? - சோதிடமா?

கிரகங்களுக்கு வேறு ஆற்றல் இல்லை என்பதை விஞ்ஞானிகள் கூறியுள்ள தெளிவான ஆதாரப்பூர்வமான விளக்கத்திற்குப் பிறகும், கிரகங்களின் சக்தி மனித வாழ்வின் எல்லா அம்சங்களையும் நிர்ணயிக்கின்றன என்று சோதிடர்கள் கூறுவதை நம்பலாமா? எந்த ஆய்வின்படி, ஆதாரத்தின்படி சோதிடர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்?

அறிவியல் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், வேத அய்தீகக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தவறான கணிப்பைக் கொண்ட பஞ்சாங்கத்தை வைத்துக் கூறப்படும் சோதி டத்தை இன்னும் நம்பிக் கொண்டிருப் பவர்களுக்கு சிந்திக்கும் திறனே இல்லை என்று தான் கூற வேண்டும்.!

பூமியிலிருந்து கிரகங்களின் சராசரி தூரம்

புதன் கிரகம் 9 கோடி 20 இலட்சம் கி.மீ.

வெள்ளிக் கிரகம் 4 கோடி 20 இலட்சம் கி.மீ.

செவ்வாய்க் கிரகம் 7 கோடி 70 இலட்சம் கி.மீ

வியாழன் (குருகிரகம்) 62 கோடி 80 இலட்சம் கி.மீ

சனிக் கிரகம் 127 கோடி 70 இலட்சம் கி.மீ

யுரேனஸ் கிரகம் 272 கோடி 20 இலட்சம் கி.மீ

நெப்டியூன் கிரகம் 435 கோடி 30 இலட்சம் கி.மீ

புளூட்டோ கிரகம் 575 கோடி 90 இலட்சம் கி.மீ

பூமி நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும் போது 15 கோடியே 21 இலட்சம் கி.மீ. தூரத்திலும், சூரியனை நெருங்கி வரும் போது 14 கோடியே 71 இலட்சம் கி.மீ. தூரத்திலும் இருக்கும். அது போன்றே மற்ற கிரகங்களும் சூரியனை நெருங்கி வரும் போதும், சூரியனிலிருந்து தூரத்தில் இருக் கும்போதும் கிரகங்களின் தூரம் சிறிது மாறுபடும்!

எந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது! வேறு சக்தி கிரகங்களுக்கு இருப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை! விஞ்ஞானத்தை நம்புங்கள்!


---------------நன்றி:- 17-4-2009 "விடுதலை" யிலிருந்து