(1) கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று பக்கம் பக்கமாக எழுதுகின்றார்கள். இணைய தளங்களிலே புலம்பித் தீர்க்கின்றார்கள். தினமணி நாளிதழுக்கு தகுந்த பதிலடி கொடுத்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பஞ்சாங்கம் பலவகை என்பதை எடுத்துக் காட்டி இருந்தார்கள். பஞ்சாங்கம் என்றால் என்ன வென்று பார்ப்போம்.
3 வகையான பஞ்சாங்கங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் வேறு- திருக்கணிதப் பஞ்சாங்கம் வேறு எபிமெரிக் பஞ்சாங்கம் வேறு. அவர்களே சொல்கின் றார்கள் பாருங்கள்" திருக் கணிதம் கி.பி. 14-ஆம் நூற் றாண்டிற்குப் பிறகு ஏற்படுத் தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ...தோராய கணிதங்களுடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற் படுத்தப்பட்டது வாக்ய முறைக் கணிதமாகும் . சில துல்லியமான கணித அமைப்புடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்டது திருக்கணித மாகும் .
இரண்டு பஞ்சாங்கத்தில் உள்ள கோள்களின் அசைவுகள் ஒன்றுபோல் இருப்பது இல்லை. வாக்ய கணித முறையில் தயாரிக்கப் படும் அனைத்து விபரங்களும் திருக்கணித முறையுடன் இணைந்து செல்வதில்லை. ஆதலால் கோள்களின் மாற்றத்திலும் திசையின் இருப்பிலும் அதிகமான வித்தியாச அமைப்பு ஏற்படும். ஒரு பொழுதும் நவாம்சச் சக்கரம் இரண்டு கணித அமைப்பிற்கும் ஒன்று போல் இருப்ப தில்லை. இவ்வாறு இரண்டு பஞ்சாங்க நிலையும் வேறு பட்டு இருப்பது போல் எபிமெரிஸ் என்று சொல்லப் படுகிற பஞ்சாங்கங்களும் வேறுபட்டுள்ளது.
" ஒருவர் சொல்கின்றார். வாக்ய பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க ஸ்லோகங்கள் அடிப்படையில் உருவாக் கப்பட்டது . அதிலே சில தவறுகள் இருந்தன. அதைத் திருத்தி திருக்கணித பஞ்சாங்கத்தை உருவாக்கினர் .திருத்தப்பட்ட பஞ்சாங்கம் அதனால்தான் திருக்கணித பஞ்சாங்கம் என்கின்றார். ஜாதகம் கணிப்பதற்கு அடிப்படையே பஞ்சாங்கம் தான். பஞ்சாங்கம் பார்த்து தான் கோள்களின் இருப்பு, நட்சத்திரம் போன்றவை சொல்கின்றார்கள். புதிதாக ஜாதகம் கணிக்க பழகுபவர்கள் நான் எந்த பஞ்சாங்கம் அடிப்படையில் ஜாதகம் கணிக்க எனக் கேட்டால் 3 வகையிலும் பழகுங்குகள், அனுபவத்தின் அடிப்படையில் எது சரியாக வருகின்றது எனப் பார்த்து அந்த முறையில் கணித்துக் கொள்ளுங்கள் என்கின்றார்கள் .
பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று குதியாய் குதிப்பவர்கள் எந்தப் பஞ்சாங்கம் சரியான பஞ்சாங்கம் என்று சொல்ல முன் வருவார்களா ?
பஞ்சாங்கம் மடத்தின் அடிப்படையில் பலவிதம் . . சிறீரெங்கம் பஞ்சாங்கம் , சிருங்கேரி மடம் பஞ்சாங்கம். சுத்த திருக்கணித பஞ்சாங்கம், ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம் , திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் ,பாம்பு பஞ்சாங்கம், யோக சேம பஞ் சாங்கம் இப்படி பலவிதமான பஞ்சாங்கங்கள். ஒவ்வொன்றுக்கும் வேறுபாடுகள் . எந்தப் பஞ்சாங்கம் இந்து மத பஞ் சாங்கம் - சொல்வார்களா?
பஞ்சாங்கம் மொழி அடிப் படையில் பலவிதம். தமிழ் பஞ்சாங்கம், தெலுங்கு பஞ்சாங்கம், பெங்காலி பஞ்சாங்கம், குஜராத் பஞ்சாங்கம் , மராத்தி பஞ்சாங்கம், ஹிந்தி பஞ்சாங்கம் .. ஒவ்வொரு மொழிக்கும் புத்தாண்டு தினம் வெவ்வேறு- அதனால் அதனோடு தொடர்பு படுத்தி சொல்லப் படும் பஞ்சாங்கம் வெவ்வேறு.இதில் எந்த மொழிப் பஞ்சாங்கம் இந்து மதப் பஞ்சாங்கம் - சொல் வார்களா?
பஞ்சாங்கத்தில் சொல்லப் படும் வார்த்தைகள் பெரும் பாலும் சமஸ்கிருதத்தில். பெரிய பெரிய வாக்கியங்கள் - சில வாக்கியங்கள் 13 வரி , 15 வரி என. 19ம் நூற்றாண்டுத் தமிழ் நடையில் எழுதப்பட்டவை. ஏதோ தமிழர்கள் உட்கார்ந்து மொழியும் புரியாமல் அர்த்தமும் தெரியாமல் கர்நாடக சங்கீதம் கேட் பது போல் கேட்க முடியுமே தவிர என்ன சொல்கின்றார் கள், என்ன அர்த்தம் என்பதை முழுவதுமாக உணரமுடியுமா? "பொய்யிலே முக்காற்படி, புரட்டிலே காற்படி, வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி" என்றார் புரட்சிக் கவிஞர்.
பஞ்சாங்க நூல்கள் அப்படிப் பட்டவைதான் . பஞ்ச+ அங்கம் (5 உறுப்புகள்) = பஞ்சாங்கம் என்கின்றார்கள். 5 உறுப்புகள் எவை என்றால் 1. திதி 2. வாரம் 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம் என்கின்றனர் . நிலையாக இருக்கும் விண்மீன் கூட்டங்களையும்,சூரியன் நகர்ந்து செல்வதாகக் நினைத்து இரண்டையும் இணைத்து ராசி என்பதை வெளிநாட்டினர் ஏற்படுத் தினர். இது சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை ஆகும். வேத ஜோதி டத்தில் சந்திரனை மையமாக வைத்து ராசிகளையும் நட் சத்திரங்களையும் குறித்தனர். இரண்டுமே கற்பனைப் பாதைகள். ஒரு எடுத்துக்காட்டிற்காகப் பார்த்தால், நெல்லை முதல் சென்னை வரை செல்லும் ரெயில் விரைவு வண்டிப்பாதையை சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை என வைத்துக் கொள்வோம். 12+27 இடங்களில் பேருந்து நெல்லை முதல் சென்னை எழும்பூர் வரை நிற்பதாகக் கொள்ளுங்கள் . வெள்ளைக் காரன் ஏற்படுத்திய அதே 12 ராசிகளை சந்திரன் அடிப் படையில் ஏற்படுத்திக் கொண்டு, 27 நட்சத்திரங் களையும் ஏற்படுத்தியிருக்கின் றார்கள். இப்போது திதி என்றால் சந்திரன் செல்லும் கற்பனை ஜோடியாக் பாதையில் சந் திரன் நிலைக்கும் , சூரியன் செல்லும் கற்பனை ஜோடி யாக் பாதையில் சூரியன் நிலைக்கும் ஏற்படும் தூரத் தின் அளவு என்கின்றார்கள் .அதாவது சந்திரன் பாதை - சூரியனின் பாதை . நமது எடுத்துக்காட்டின்படி பேருந்து பாதை - ரயில் பாதை. இந்த கற்பனை தூரம் 360 பாகைகள் கொண்ட வட்டம் . 360 பாகையை ராசி கள் 12 ஆல் வகுத்து ஒவ் வொரு ராசிக்கும் 30 பாகை என ராசிக்கு சொன்னார்கள். இப்போது திதி 30 என வைத் துக்கொண்டு 360 பாகையை 30 ஆல் வகுத்து ஒவ்வொரு திதிக்கும் 12 பாகை எனச் சொல்லியிருக்கின்றார்கள். மாதந்தோறும் எல்லா நாட்டிலும் அமாவாசை பவுர்ணமி வருகின்றது. ஆனால் நமது நாட்டில் அமாவாசைக் கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட 30 நாளை 30 திதிகளாகப் பஞ்சாங்கத்தின் படி பிரித்திருக்கின்றார்கள். சந்திரன் என்பது துணைக் கோள். பூமியைச் சுற்றி வருகின்றது . தன்னைத் தானே சந்திரன் பூமியைப் போல் சுற்றிக் கொள்வதில்லை. பூமி யைச் சுற்றி வரும் சந்திரனின் ஒரு பகுதி பூமிக்குத் தெரிகின்றது. சூரியனின் ஒளி பூமியில் படுவது போல சந்திரனிலும் படுகின்றது. சந்திரனில் படும் சூரிய ஒளி பூமிக்குத் தெரிகின்றது. பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின் விளைவாக சந்திரன் மறைவது போலவும், மீண்டும் தோன் றுவது போலவும் தோன்று கின்றது என்பது அறிவியல். அப்படித்தான் அமாவாசையும் பவுர்ணமியும் ஏற்படு கின்றது. பஞ்சாங்கத்தில் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்றால் வளர்பிறை(சுக்ல பட்சம்) , தேய்பிறை(கிருஷ்ண பட்சம்) என்று பிரித்திருக்கின்றார்கள். பிரித்தது மட்டுமல்ல, நல்ல காரியங்களை வளர் பிறையில்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்து விட்டார்கள். இது மட்டுமல்ல பிரதிமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடப்ப தற்கும் அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து 1வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம் ? அல்லது அதி லிருந்து 4வது நாள், 8-வது நாள், 9வது நாள், 14வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம்- .எப்படி விஞ்ஞானம்? பஞ் சாங்கம் ஏன் இந்த நாள்களில் நல்ல காரியங்கள் செய்யாதே என்கின்றது? .யார் தீர்மானித் தார்கள்? எப்படி தீர்மானித் தார்கள்? எதற்காக மாதத்தின் மூன்றில் ஒரு பாக நாளில் ஒன்றும் செய்யாதே எனத் தடுத்தார்கள் ? ஒரு பக்கம் ஜோதிடம் அறிவியல் எனச் சொல்லி விட்டு அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை நம்ப வைக்கத்தான் பஞ்சாங்கம்.
. பஞ்சாங்கம் பார்ப்பது என்பதை மனதளவில் தமிழர் களுக்கு ஊட்டி வைத்துள் ளார்கள். புது கார் வாங்க வேண்டுமா?,புது வீடு வாங்க வேண்டுமா? திருமணம் முடிக்க வேண்டுமா? வேலைக்கு மனுப் போட வேண்டுமா? வெளியூருக்குப் போக வேண்டுமா ? புதிதாகத் தொழில் தொடங்க வேண்டுமா? எல்லாவற்றிக்கும் பஞ்சாங்கத்தைப் பார்த்து விட்டு கிளம்பு எனப் பழக்கப் படுத்தி வைத்துள்ளனர். கிழியட்டும் பழம்பஞ்சாங்கம் என்றார் புரட்சிக் கவிஞர். விஞ்ஞான முன்னேற்றத்தால் , பகுத்தறிவு வீச்சால் கிழிகின்ற பஞ்சாங்கங்களைப் பார்த்து மனம் பதறுகின்றனர் மதவாதிகள்.
-------------வா.நேரு
please visit www.pagutharivaalarkazhakam.blogspot.com
Thursday, May 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment